Ad Widget

நாடுமுழுவதும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறனை அதிகரிக்க நடவடிக்கை!!

தற்போது நாடுமுழுவதும் பரவி வரும் கோவிட்- 19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலை காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோவிட்-19 நோயாளிகளின் தீவிர சிகிச்சைக்காக ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் மூன்று தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைக்க ஏற்பாடுகள்...

அதிவேக நெடுஞ்சாலையில் சுமந்திரனின் வாகனம் விபத்து!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில், கல்முனை நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பங்கேற்பதற்காக சென்ற போது, வாகனம் விபத்தில் சிக்கியது. இன்று காலை கட்டுநாயக்கவிற்கு அண்மையில், அதிக வேக நெடுஞ்சாலையிலேயே வாகனம் விபத்துக்குள்ளாகியது. வாகனம் நெடுஞ்சாலையில் சறுக்கி, வீதியின் இருபக்க காப்பரண்களிலும் பல தடவைகள் மோதிய...
Ad Widget

நாடு முழுவதும் திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால், திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு, இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல், இரண்டு வாரங்களுக்கு குறித்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் கடும் பிரயத்தனம்- சிறிதரன்

தமிழர்களின் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறுதான், இராவணனையும் இராவணவலவேகய எனும் சிங்கள அரசனாகக் காண்பிக்க முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் உரையாற்றுகையில், “இலங்கையில் சித்திரப் பாடத்தினை எடுத்தால்...

மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடலுக்குத் தடை!

நாட்டில் கொரோனா தொற்று அச்சநிலையைத் தொடர்ந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு மறு அறிவிப்பு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வழிபாட்டு தலங்களில் ஒரேநேரத்தில் ஆகக் கூடியது 25 பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொரோனா பரவலையடுத்து கொழும்பு தேசிய நூதனசாலை இரண்டு...

யாழ்ப்பாணத்தில் 14 பேருக்கு கோரோனா தொற்று; நால்வர் கொடிகாமம் வியாபாரிகள்

யாழ்ப்பாணத்தில் 14 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 19 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 760 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 19 பேருக்கு தொற்று...

நாட்டில் மேலும் 1,531 பேருக்கு கோரோனா தொற்று

நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். நாட்டில் 2020 ஜனவரி மாதம் முதல் நேற்று வரை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 484 பேர்...