தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – சிவாஜி

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கு செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கால மாகாண முதலமைச்சர்வேட்பாளர் தொடர்பில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா?...

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை!!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சில வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும் என்று அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். பண்டிகை காலப்பகுதியில் சிலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Ad Widget

யாழில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா நோய் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கல்வியங்காடு , வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த 77 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சடலத்தை சுகாதார விதிமுறைகளின்...

பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருட்டு; மூவர் சிக்கினர்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது...

யாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி எட்டாம்...

திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா!

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 386 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக...