Ad Widget

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது. இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது....

உள்நாட்டுப் போரினால் உடல் ஊனமுற்ற பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் இலவச செயற்கை கால்கள்!!

யுத்தத்தின் போது கைகால்களை இழந்த 64 முன்னாள் போராளிகளிற்கு செயற்கை கை, கால்களை இராணுவம் வழங்கவுள்ளது. இதில் 58 ஆண்களும் ஆறு பெண்களும் அடங்குவர். அவர்கள் தற்போது வடக்குப் பகுதிகளில் சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார்கள். ஏப்ரல் 5 மற்றும் 6 திகதிகளில் அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல போர் மாவீரர்கள் நல மையத்தில் அவர்களின் அளவீடுகள்...
Ad Widget

யாழ் மத்திய பேருந்து நிலையம் வழமைக்கு திரும்பியது!

யாழ் மத்திய பேருந்து நிலையம் இன்று (7) காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. அரச, தனியார் பேருந்துகள் வழக்கம் போல சேவைகளை ஆரம்பித்துள்ளன. யாழ் நகரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி நகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டன. இதன்படி, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பயணிகள்...

யாழ்.பல்கலையில் க.பொ.த. உயர்தரத்தில் ஆங்கில பாடத்தை தெரிவு செய்யும் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் கருத்தமர்வு

கல்விப் பொதுத்தராதர உயர்தர ஆங்கில பாடம் (பாட இலக்கம்: 73) தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறைத் தலைவர் சுவாமிநாதன் விமல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் பிரதான பாடங்களில் ஒன்றாக மாணவர்கள் தெரிவு...

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் கடைகளை நாளை மீளத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களில் கோவிட்-19 நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை வியாழக்கிழமை தொடக்கம் திறக்க அனுமதிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் விடுத்துள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் உள்ள வர்த்தக நிலையங்கள்...

யாழ். நகரில் மேலும் 54 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் நகரினைச் சேர்ந்த மேலும் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி (நியூமாக்கெட்) வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன. 464 பேருக்கு முல்லேரியாவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன....

யாழிலிருந்து சென்ற வாள்வெட்டு குழு வவுனியாவில் அட்டகாசம்!!

யாழில் இருந்து வெள்ளை வேனில் வாள்களுடன் சென்ற குழுவொன்று இரு வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை சேதப்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தடியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார்...

இலங்கையில் 600ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பிபில மற்றம் அம்பாறை பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 70 மற்றும் 47 வயதுகளையுடைய ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 588ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கடந்த 24...