- Monday
- July 7th, 2025

சைவ தமிழ் மக்களால் மகோன்னத நாளாக அனுஷ்டிக்கப்பட்டுவரும் மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக் களஞ்சியம், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் அலரி...

கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் -சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதேவேளை இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார். பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களும் சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி...

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய பயிற்சிப்...

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரச வைத்தியசாலையில் அல்லது கண் மருத்துவர் ஒருவரை சந்தித்து குளுக்கோமா நோய் தொடர்பாக பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தை கண் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மார்ச் 7 ஆம் திகதி ஆரம்பமான குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு வைத்தியர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த குளுக்கோமா வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது....

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சகல சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தொற்று நீக்கல் நடவடிக்கை யைத் தொடர்ந்து அனைத்து சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். தொற்று உறுதியான வைத்தியரும் சிகிச்சை முடித்து ஒய்வில் உள்ளார் என்றும்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (செவ்வாய்க்கிழமை) உறுதியாகியுள்ளது. அவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 6 பேர் இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்றும் மேலும்...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் 10வது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆவலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு...

உள்நாட்டு எரிவாயு விலையில் அதிகரிப்பை மேற்கொள்ள எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், எரிவாயு விலையை அதிகரிக்க அமைச்சரவையில் வர்த்தக அமைச்சரால் முன்மொழியப்பட்டதாக கூறினார். இந்த திட்டத்தை மைதிப்பாய்வு செய்ய அரசாங்கம் முடிவு செய்த போதும் விலை...

காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவில்லை. காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய பி.சி.ஆர்.பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதாவது, காரைநகர் சாலையில் பணியாற்றுபவர்களில் 90பேரின் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே, 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் 30 வயது மதிக்க தக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் காணப்படுகின்றதோடு குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்....

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களைத் முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.08) ஆலோசனை வழங்கினார். எதிர்காலத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தலைவர்களுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார்....

மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார். மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது...

யாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் நேற்று அதிகாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதனை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில்...

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாம் காணப்பட்டவர்களில் 8பேர், காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் காப்பாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து...

இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீப்பந்த போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நல்லூர் பின் வீதியில் நடைபெற்றது....

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் மறுநாளான இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கோவிட் -19 நோய்த் தொற்றுக் காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் கோவிட் -19 விதிமுறைகளுக்கு அமைய இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில்...

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 8 வது நாளான இன்று (திங்கட்கிழமை) தமது போராட்டத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுத்துள்ளனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர்...

கடந்த 21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்ஸன், கஜன் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டு,...

திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாதுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்க்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல், பரீட்சைகள் திணைக்களம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் இடையே நடைபெற்றதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இதுவரை...

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் மறுநாளான இன்று உயிரிழந்துள்ளார். ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தவர்களுக்கு ஏற்பட்ட தொற்றில் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு தொடர்பில் இறப்பு விசாரணைகளுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

All posts loaded
No more posts