Ad Widget

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் கோவிட் -19 நோயால் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கோவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றுமாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் இன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்...

அகழ்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறை போராட்டம்!!

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறையினால் போராட்டம் இன்று (திங்கட்கிழமை)ஆ ரம்பமானது. குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதல் குறித்த வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், முன்னாள் வடக்கு...
Ad Widget

10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு இன்று நியமனம் – பெயர் பட்டியல் வெளியானது!

10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி அவர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தினால் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 14 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10 ஆயிரம் பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து,...

உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் அதிகூடிய அதிகாரப் பரவலாக்கல் அமையவேண்டும் – கூட்டமைப்பு

ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் விரும்புகின்றோம். எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான வல்லுநர் குழுவுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே கட்டமைப்பின் தலைவர்...

யாழ்.போதனா அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமாலை அந்த நோயாளியிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு மருத்துவ சேவை வழங்கிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கே...

மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – அஜித்ரோஹண

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொருட்கொள்வனவில் ஈடுபடுவர்கள் , கொவிட்- 19 வைரஸ் பரவல் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இக்காலப்பகுதிகளில் பின்பற்றபட வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் , சுற்று நிரூபமொன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது...

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நல்லூர் சுகாதார மருத்துவ...

ஜனாதிபதியின் அண்மைய கருத்து ஊடகங்களைப் பயப்படுத்துவதற்கே- சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “ஒருசில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் ஊடகத்துறைப் பற்றி ஒரு பாரிய எச்சரிக்கையை ஜனாதிபதி விடுத்துள்ளார்....