Ad Widget

வட மாகாண அரச காணிகளை வட பகுதி மக்களுக்கே பகிந்தளிக்க உத்தரவு!

வடபகுதியில் உள்ள அரச காணிகளை வடபகுதியில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை நாளைய தினத்துக்குள் மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பணித்துள்ளார். யாழ் மாவட்ட செயலாகத்தில் நடைபெற்ற...

ஆயுர்வேத சிகரெட் அறிமுகம்!!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சிகரெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆயுர்வேத சிகரெட்டை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த ஆயுர்வேத புகைத்தல் (கறுவாப்பட்டை சிகரெட்) உள்ளூர் உற்பத்தித் துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது...
Ad Widget

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய உறவுகளை சந்திப்பதாக அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவறு கூறினார். உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபாய...

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட 09 பேருக்கு வடக்கில் கொரோனா!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்விகற்கும் கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்த மாணவர்கள் மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியான 09 பேரில் யாழ்ப்பாணம் மாநகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும்...

ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!!

ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் எஞ்சின் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே உத்தியோகத்தர்களுக்கு எதிரான நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் பல தடவைகள் கலந்துரையாடியிருந்த போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை...