Ad Widget

சர்வதேச மகளிர் தினத்தில் யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி

இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீப்பந்த போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நல்லூர் பின் வீதியில் நடைபெற்றது....

பருத்தித்துறை பெண் கோவிட் -19 நோயால் உயிரிழப்பு; மின் தகனம் செய்ய நடவடிக்கை

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் மறுநாளான இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கோவிட் -19 நோய்த் தொற்றுக் காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் கோவிட் -19 விதிமுறைகளுக்கு அமைய இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில்...
Ad Widget

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 8 வது நாளான இன்று (திங்கட்கிழமை) தமது போராட்டத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுத்துள்ளனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி

கடந்த 21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்ஸன், கஜன் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டு,...

முக்கிய பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம் – அரசாங்கம்

திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாதுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்க்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல், பரீட்சைகள் திணைக்களம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் இடையே நடைபெற்றதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இதுவரை...

பருத்தித்துறையில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் உயிரிழப்பு!!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் மறுநாளான இன்று உயிரிழந்துள்ளார். ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தவர்களுக்கு ஏற்பட்ட தொற்றில் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு தொடர்பில் இறப்பு விசாரணைகளுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

செம்மணி சுடலையில் வெடிமருந்து பொதி

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் அபாத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது. இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து...

இராணுவச் சிப்பாய் தாக்கியதாக இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதி

இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத்...

யாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்க்க 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள்!

யாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்ப்பதற்காக 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளார்கள் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்த அவர், எனக்கு எதிராகவும் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு எம்மை மாநகர சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து...

இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், நேற்று கிடைத்துள்ள தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் வழங்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்தன. ´கொவெக்ஸ்´ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சுக்கு 14 லட்சம் எஸ்ட்ரா...

இலங்கையில் 85 ஆயிரத்து 695 பேர் கொரோனாவால் பாதிப்பு – 502 மரணங்களும் பதிவு!

நாட்டில் மேலும் 359 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 290 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த...

இரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள பல தேவாலயங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, யாழ்ப்பாணம் பொஸ்கோ புனித திரேசா தேவாலயத்தில் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பது தொடர்பாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு,...