Ad Widget

இலங்கையில் 85 ஆயிரத்து 695 பேர் கொரோனாவால் பாதிப்பு – 502 மரணங்களும் பதிவு!

நாட்டில் மேலும் 359 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 290 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 59ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில், இன்னும் மூவாயிரத்து 134 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பல்லேகல பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆணொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி மரணித்தார்.

நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆணொருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மரணித்தார்.

அதேபோல பரவர்தனஓயா பகுதியை சேர்ந்த 72 வயதான ஆணொருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று மரணித்தார்.

அத்துடன் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மரணித்தார்.

இதேவேளை, கன்னத்தொட்ட பகுதியை சேர்ந்த 67 வயதான ஆணொருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மரணித்தார்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 502ஆக அதிகரித்துள்ளது.

Related Posts