Ad Widget

கொழும்பு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பு, அவிஸ்ஸாவெல்ல, பியகம மற்றும் வவுனியாவில் இருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை மிக வேகமாக பரவுக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு உயிரியல்...

கொழும்பு- யாழ். நகர்சேர் கடுகதி சேவையில் இன்று முதல் 2ஆம்,3ஆம் வகுப்புகள் இணைப்பு!!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் சேவையில் ஈடுபடும் தொடருந்தில் இன்று முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த தகவலை யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார். இந்த சேவை தொடர்பில் அவர் அவர் மேலும் தெரிவித்ததாவது; கல்கிசையிலிருந்து தினமும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும்...
Ad Widget

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை – சர்ச்சைகள் குறித்து வெளிப்படுத்தினார் சுமந்திரன்!

பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராதரவுடன் நடைபெற்று முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் குறித்து முன்வைக்கப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியினை...

ஐபிஎல் வீரர்கள் ஏலம் பட்டியலில் யாழ்ப்பாணம் வீரர் வியாஸ்காந்த் இடம்பிடித்தார்!!

14ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் புதிய வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த 9 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களிலேயே விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 2021 இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலம் வரும்...

வடக்கில் மேலும் 7 பேருக்கு கோரோனா தொற்று; ஒருவர் யாழ்.கச்சேரி பஸ் சேவை நடத்துனர்

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை- கச்சேரி தனியார் பேருந்து சேவையின் நடத்துனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 379 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன....

லுணுகல, எகிரியா பகுதிகளில் நில அதிர்வு

லுணுகல, எகிரியா பகுதியில் இன்று அதிகாலை 4.53 மணியளவில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. பல்லேகல மற்றும் ஹக்மன பகுதிகளிலும் இந்த நில அதிர்வு எதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 31...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை!!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை போல தனக்கு தோன்றுகின்றது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளாகவும், பொலிஸ்...

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஐந்தாவது மரணம் பதிவானது!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச்...