Ad Widget

புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த பகுதியில் பௌத்த விகாரைகள் இருந்ததாக தெரிவித்து அகழ்வு ஆராய்ச்சி

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் இன்று (18.01.2021)...

18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி?

சமுதாயத்தை மேலும் ஒழுக்கமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்படவேண்டும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர யோசனை முன்வைத்துள்ளார். அமைச்சரின் இந்த முன்மொழிவை எதிர்க்கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
Ad Widget

யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்புகின்றன. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் இன்று கொழும்பை நோக்கித் தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் பிரதீபன் எமது கெப்பிட்டல் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், முதலாவது புகையிரதம் காங்கேசன்துறையில் இருந்து காலை...

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என எச்சரிக்கை

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவெனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிலைமைகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின்...

ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ்!!

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்தொகை ஐஸ் கிறீம் அடங்கிய பெட்டிகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்: பல்கலைக்கழக அனுமதி செம்டெம்பரில்!

2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிாியர் ஜீ.எல். பீரிஸ் தொிவித்துள்ளார். மல்வத்து அஸ்கிரிய தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக் கழகத்திற்கு தகுதிபெறும் மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில்...

இலங்கையில் ஒரேநாளில் 749 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 749 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53ஆயிரத்து 62ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 425 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று...

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் பயணங்கள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன. ரயில்வே திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த தனியார் ரயில் சேவை தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீரமானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தங்களது பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட...