. January 15, 2021 – Jaffna Journal

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது!!

நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு, 20 உறுப்பினர்களில் 13 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக்... Read more »

தனிமைப்படுத்தலின் போது தேவையற்ற பதற்றத்தைத் தவிருங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி

கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதற்றத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனைவிட, யாழ்ப்பாணத்தில் டெங்கு... Read more »

வவுனியாவில் தொடர்ந்து முடக்கம்: மேலும் 16 பேருக்கு கொரோனா

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை... Read more »

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் அத்திவாரப் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி கடந்த எட்டாம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்கள்,... Read more »

கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்ட வைத்தியர் கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்... Read more »

இங்கிலாந்து வீரர் ஊடாக நாட்டுக்குள் புதிய வகை கோரோனா வைரஸ்!!

இலங்கையில் கோரோனா வைரஸின் புதிய வலுவான மாறுபாட்டை வெளிநாட்டிலிருந்து வருவோரால் நாட்டுக்குள் பரவும் அபாயம் இல்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மருத்துவ வல்லுநர்... Read more »

வடக்கில் நேற்றையதினம் 8 பேருக்கு கோரோனா தோற்று!!

வடக்கு மாகாணத்தில் நேற்றையதினம் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மன்னாரில் கடந்த சில நாள்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 4 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன்,... Read more »

நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது!

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இந்த... Read more »

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும்... Read more »