Ad Widget

இங்கிலாந்து வீரர் ஊடாக நாட்டுக்குள் புதிய வகை கோரோனா வைரஸ்!!

இலங்கையில் கோரோனா வைரஸின் புதிய வலுவான மாறுபாட்டை வெளிநாட்டிலிருந்து வருவோரால் நாட்டுக்குள் பரவும் அபாயம் இல்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்ததாவது;

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வந்த இங்கிலாந்து அணியின் வீரர் ஒருவருக்கு, புதிய வகை கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும், தனிநபர் மூலம் பரவும் ஆபத்து இல்லை.

இங்கிலாந்து அணியின் வீரர் உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ளாததால், கோவிட் -19 நோய்த் தொற்றின் விகாரத்தை இன்னொருவருக்கு பரப்ப முடியாது என்பதை தீர்மானிக்க முடியும்.

அந்த வீரர் போதுமான சிகிச்சை வசதியைப் பெறுவார்.

கோரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஒரு சாதகமான அறிகுறியாகும்.

வைரஸ் இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதால், இங்கிலாந்திலிருந்து வருகை தரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன – என்றார்.

Related Posts