Ad Widget

வடக்கில் இன்று 31 பேருக்கு கோரோனா தொற்று!!

வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 25 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் இன்று 31 பேருக்கு கோரோனா வைரஸ் தோற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர்...

இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கை!!

வர்த்தக நிலையங்கள், அங்காடிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளை முன்னெடுக்கும்போது, அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானிக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்று முதல் கண்காணிக்கப்படவுள்ளது. இதற்காக விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பேணுதல், கிருமித்...
Ad Widget

பல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்; துணைவேந்தர் மறுப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் சந்தேகமடைந்துள்ளதையடுத்து, புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய தூபி அமைக்க பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தையும் முடித்து வைத்தார். எனினும், உடனடியாக தூபி அமைக்க துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், இன்றே… இப்பொழுதே தூபி...

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்ட விவகாரம்: வடக்கு- கிழக்கு முழுமையாக முடங்கியது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைத்து தமிழ் கட்சிகள், மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் குறித்த கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு- கிழக்கு மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள். அதற்கமைய...

போராட்டம் நிறைவுக்கு வந்தது: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை...

வவுனியா நகர கொத்தணி; மேலும் 6 பேருக்கு தொற்று!!

வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம்...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அங்கீகரிக்கப்பட்ட தூபியாக அமைக்கத் தயாராக உள்ளேன்; பேரவைக் கூட்டத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன்; துணைவேந்தர்

“மாணவர்களின் உணர்வுடன் இசைந்தே துணைவேந்தரும் பயணிக்கின்றார். அவ்வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபியாக கட்டியெழுப்ப தயாராக உள்ளேன்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராசா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பது தொடர்பான மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார் என்று நாடாளுமன்ற...

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வடக்கு- கிழக்கு தழுவிய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண வழமை மறுப்பிற்கு எமது பரிபூரண ஆதரவையும் வழங்குகின்றோம் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, ‘இறந்தோர் நினைவுச் சின்னம்’ இடித்தகற்றப்பட்டமை...

அனைத்து ஊழியர்களும் திங்கட்கிழமை முதல் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும்

அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் திங்கட்கிழமை முதல் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளலர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கொவிட் – 19 தொற்று காரணமாக கடந்த காலங்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களே சேவைக்கு...

ஹர்த்தாலுக்கு முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ரிஷாட்

வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது....