Ad Widget

யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தையின் வியாபாரிகள் 313 பேரிடம் பி.சி.ஆர் சோதனை

திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள், 313 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக இன்று (புதன்கிழமை) பெறப்பட்டன. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாகவே இன்றையதினம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை...

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது!

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தொப்புள் கொடி உறவுகளான இந்திய உறவுகளுக்கும் எமக்கும் பகையுணர்வை ஏற்படுத்தாது எல்லை தாண்டிய மீன்பிடியை தடுத்து நிறுத்தி, எமது வாழ்வாதாரத்துக்கு...
Ad Widget

தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் வெளியீடு

வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மருதானை பிரதேசத்தின் போலியான முகவரி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருதானை பிரதேசத்தில் குறித்த முகவரியில் அவ்வாறான நபர் ஒருவர் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது....

யாழ்.மாநகர சபை பட்ஜெட் மீண்டும் தோல்வி; முதல்வர் பதவியை இழந்தார் ஆனல்ட்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் எதிர்ப்பால் இரண்டாவது தடவை தோற்கடிக்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் பதவியிழந்தார். 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் கடந்த ஆண்டு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் தனக்கு...

மருதனார்மடம் சந்தைக்கு 2 வாரங்களுக்குள் சென்றவர்களை தொடர்புகொள்ளக் கோரிக்கை!!

கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு பொருள்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் தங்கள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினருடன் (சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்) அல்லது கிராம சேவை அலுவலகரிடம் தொடர்புகொண்டு தம்முடைய தகவல்களை தெரிவிப்பதுடன் சமூகத் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையும் செய்துகொள்ள முடியும். இவ்வாறு வடமாகாண...

மருதனார்மட கொத்தணி சமூகத் தொற்றா?; வவுனியாவில் 4 பாடசாலைகள் மூடப்பட்டது ஏன்? – வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

கொரோனா இரண்டாம் அலையில் வடக்கில் 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடுவில், சண்டிலிப்பாய், தெல்லிப்பழையில் சமூகத்தொற்றாக மாறியுள்ளதா என்பதை அறிய பிசிஆர் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மாலை யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில நேற்று...

நல்லூர் பிரதேச சபை பாதீடு தோற்கடிப்பு – தவிசாளர் பதவி இழக்கிறார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் பதவி இழக்கிறார். 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச...

தனிமைப்படுத்தப்பட்டது யாழ். கீரிமலை அந்தியேட்டி மண்டபம்

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கீரிமலை அந்தியேட்டி மண்டபத்திற்கு வந்திருந்த நிலையில், குறித்த மண்டபத்தில் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குருக்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் உட்பட சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றையதினம் ஏழாலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் கடந்த 12 ம் திகதி அந்தியேட்டி கடமை ஒன்றை நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு சென்றிருந்தார். இதன்பின்னர் குறித்த...

யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேக நபர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேக நபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கடந்த செப்ரெம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் வைத்து தனுரொக் என்ற மானிப்பாய் இளைஞனை...

மருதனார்மடம் கொத்தணி; மேலும் ஆறு பேருக்கு தொற்று

மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரில் மேலும் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தெல்லிப்பழையைச் 6 பேருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம்...

உயர் நீதிமன்ற வளாகத்தில் சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டது!

கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டட வளாகத்தில் சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு கோப்புகள் உள்ளிட்ட பொருள்களுக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை என்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களம் இந்த தீ சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “இன்று (16-12-2020) மாலை 4.45...