Ad Widget

ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்!

தீபாவளி தினமாகிய நாளைய தினம் பொது மக்கள் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில்...

தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள், தீப்பற்றக்கூடிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு, விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலானோர் அல்ஹகோல் அடங்கிய கை கழுவும் திரவத்தை அதிகம் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகையை...
Ad Widget

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதாக எடுக்கப்படும் என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (வியாழக்கிழமை) மாநகர முதல்வர் இம்மானுவேல்...

அரசு சிறிதும் தோல்வியடையவில்லை. கொரோனா நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- இராணுவத் தளபதி

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அரசாங்கம் சிறிதும் தோல்வியடையவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில், வைரஸை சிறந்தமுறையில் கட்டுப்படுத்தி வருவதாகவும், இதில் பொய் சொல்லத் தேவையில்லை என்றும் அவர் கூறினார். அவர் இன்று காலை தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்தார். அதில் மேலும் அவர் குறிப்பிடுகையில்......

உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி கொண்டு வரப்பட்டதால் 14 குடும்பங்கள் ஊர்காவற்றுறையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா அபாயமுள்ள வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடல் உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட எழுவைதீவு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் மாகாணமொன்றில் உயிரிழந்த 95 வயதான முதியவரின் சடலமே எழுவைதீவிற்கு கொண்டு வரப்பட்டது....

சட்டவிரோத கட்டிடங்கள் அகற்ற முயன்றதால் குருநகரில் பதற்றம்!

குருநகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றும் முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் கைவிப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட குருநகர் பகுதியில் வடிகால்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் கடைகள் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர சபையினரால் இடித்து அழிக்க பெக்கோ (JCP) இயந்திரத்துடன் சென்ற போதிலும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. ஜனாதிபதி...

ஏனைய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை யாழ்ப்பாணத்தில் உரிமை மாற்ற முடியும்!!

“யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை செய்து தமக்கான சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்” இவ்வாறு மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது; தற்சமயம் எமது அலுவலகத்தினால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் புதிய மோட்டார் சைக்கிள்களிற்கான உரிமை மாற்றம்...

தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் வேண்டுகோள்!

இம்முறை தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தனையோடு கொண்டாடுங்கள் என என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளனர். உலகளாவிய ரீதியில் கொரோனாதாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது இந்த நிலையில்...

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு 12 இல் வசிக்கும் 54 வயதுடைய ஆண் ஒருவரும் மீகொடயில் வசிக்கும் 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட.பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றது- கஜேந்திரன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தால், அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேரிடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நாடாளுமன்ற...