Ad Widget

அரசு சிறிதும் தோல்வியடையவில்லை. கொரோனா நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- இராணுவத் தளபதி

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அரசாங்கம் சிறிதும் தோல்வியடையவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில், வைரஸை சிறந்தமுறையில் கட்டுப்படுத்தி வருவதாகவும், இதில் பொய் சொல்லத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

அவர் இன்று காலை தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்தார். அதில் மேலும் அவர் குறிப்பிடுகையில்…

இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தையும் பொருளாதாரத்திற்கு மிகக் குறைவான பாதிப்பையும் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் கூறினார்.

மக்கள் தொகை அதிகமுள்ள அதேபோல் அதிக நீரோட்டம் நிறைந்த பகுதியாக கருதப்படும் கொழும்பில் கொவிட் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டுக்கும் மீன் விற்பனை செய்யும் மத்திய நிலையத்தில் ஏற்பட்ட தொற்றே இன்றைய நிலைக்கு காரணம். கொழும்பின் அடர்த்தியான பகுதியில் வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

மினுவாங்கொட கொவிட் தொத்தணி முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கொத்தணி மூலமே நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாம் தோல்வியடையவில்லை. தோல்வியடைய போவதும் இல்லை. நாட்டில் சிறந்த தலைமைத்துவம் உள்ளது. இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம்´ என்றார்.

Related Posts