
ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

வவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். இந்நிலையில் அவர்களில் 25 பேருக்கு... Read more »

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மினுவாங்கொட கொத்தணியிலிருந்து கொரோனா சந்தேகத்தின் பெயரில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் ஒரு தொகுதி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு தொகுதியினருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி... Read more »

இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரதி பணிப்பாளர், பிரதம கணக்காளர்... Read more »

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முதியவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, முதியோர் இல்லங்கள் மற்றும் முதியவர்கள் இருக்க... Read more »

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியின் தொடர்ச்சியாக மேலும் 120 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மாலை (ஒக்.20) கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார். நேற்று மட்டும் 180 பேர் கோரோனா தோற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட... Read more »

நாட்டில் கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று... Read more »

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 05.00 மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள்... Read more »