. October 7, 2020 – Jaffna Journal

கோரோனா பாதித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓட்டம்!!

கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 62 வயதுடைய முதியவர், ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பித்துள்ள நிலையில் அவரைக் கண்டறிவதற்கு உதவுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது. இல. 307 வத்த, பெலியகொட பகுதியைச் சேர்ந்த தோன் சரத் குமார என்ற குறித்த நபரை அடையாளம் கண்டால், உடனடியாக... Read more »

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பொலிஸ் மா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் 1933 என்ற அவசர இலக்கத்திற்கு பொலிஸ் மா... Read more »

முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகள் இடம்பெறும் – கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேவையான... Read more »

யாழில் நீண்ட காலமாக கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது!!

யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இருபாலை மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த இருவரே நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று... Read more »

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தப்பட்டார்!!

ஹம்பகா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அபாய பிரதேசமான ஹம்பகா மாவட்டத்திலிருந்து குறித்த பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்படாமலிருந்தார். இதனையடுத்து குறித்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி அவருடைய இருப்பிடத்திலேயே... Read more »

வடக்கில் 6 ஆயிரத்து 682 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் – பிரதமர்

வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6682 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தி வழங்கும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) பிரதமர் இடத்திலான... Read more »

வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதிப்பணம் இன்று வழங்கிவைக்கப்பட்டது

“வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களுக்கான மீதிப்பணம் வழங்கும் செயற்திட்டம் நேற்றையதினம் (06) காலை இடம்பெற்றது. இந்த பணம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான... Read more »

புங்குடுதீவு மற்றும் சாவக்ச்சோியை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா!!

ஹம்பகா – மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்கள் கொழும்பிலேயே சிகிச்சை பெற்றுவருவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். தொற்றுக்குள்ளான 10 போில் 9 பேர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும்,... Read more »

பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் கொல்லவில்லை; இறுதி புகைப்படத்தில் இருப்பவர்கள் இந்திய இராணுவ சீருடையிலிருந்தனர்: பொன்சேகா!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்தார், அவரை இராணுவம் கொல்லவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (6) நாடாளுமன்றத்தில் நடந்த... Read more »

அபாயகரமான சிக்கலான நிலையை எதிர்கொள்ளும் தறுவாயில் யாழ். மாவட்டம் – அரசாங்க அதிபர்

யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்ட... Read more »

உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறது – அமைச்சர் டக்ளஸ்

போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) நிதித் திருத்தக் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும்... Read more »

யாழில் இன்று முதல் தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்... Read more »