Ad Widget

2016-ல் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் “கபாலி” தான்!

2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே 150 நாட்களை தாண்டி ஓடிய ஒரே தமிழ் படம் என்ற பெயரை ‘கபாலி’ திரைப்படம் பெற்றுள்ளது.

2016-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் மெஹா ஹிட் திரைப்படங்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றவை சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி’,இளைய தளபதியின் ‘தெறி’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டும்தான்.

முன்னரெல்லாம் ஒரு படம் எத்தனை நாட்கள் தியேட்டரில் ஓடியது என்பதை கணக்கில் கொண்டு அந்த படம் சூப்பர் ஹிட்டா?இல்லையா? என கணக்கிடப்பட்டது.ஆனால் தற்போது பெரிய நடிகர்கள் படம் கூட 50 நாட்களுக்கு மேலாக தியேட்டரில் ஓடுவதில்லை.எனவே அதிக வசூல் செய்த படங்கள் மட்டுமே இப்போது சூப்பர் ஹிட் பட வரிசையில் சேர்க்கப்படுகின்றன.

ஆனால் இந்த வரையறையை உடைத்து,இந்த ஆண்டில் 150 நாட்களுக்கு மேலாக ஓடிய ஒரே தமிழ் படம் என்ற சாதனையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “கபாலி” திரைப்படம் படைத்துள்ளது.மதுரையிலுள்ள மணி இம்பாலா திரையரங்கில் கபாலி திரைப்படம் 150 நாட்களுக்கு மேலாக ஓடியுள்ளது.

தெறி மற்றும் ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வசூலை பெற்றாலும், 100 நாட்களுக்கு மட்டுமே திரையரங்கில் தாக்குப்பிடிக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts