18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை!!

தமிழ்நாட்டில் 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்ற வாகனங்களை இயக்குவது சட்டப்படி கடுமையான குற்றமாகும் எனத் தமிழகக் பொலிஸார் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பொலிஸார் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அறிவிப்பின்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பொது வீதிகளில் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால், சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக, அவர்களின் பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ. 25,000 வரை (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்படுவதுடன், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடமுண்டு.

குறிப்பிட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (Registration Certificate – RC Book) உடனடியாக இரத்து செய்யப்படும்.

விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய அந்தச் சிறுவனுக்கு, அவர் 25 வயதை அடையும் வரை இந்தியாவிற்குள் எந்தவொரு ஓட்டுநர் உரிமமும் (Driving License) வழங்கப்பட மாட்டாது.

“பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பிடிவாதத்திற்காகவோ அல்லது அவசரத் தேவைகளுக்காகவோ மோட்டார் வாகனங்களை அவர்களிடம் கொடுப்பதைத் தவிர்ந்துகொள்ள வேண்டும். உங்களது சிறு அலட்சியம், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதுடன் உங்களைச் சிறைக்கும் அனுப்பக்கூடும்” எனத் தமிழகப் போக்குவரத்துப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்துப் பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts