இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருட கால எல்லைக்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் பெற்றுக் கொள்ளவேண்டும். இல்லையேல் தண்டம் விதிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமாரா எச்சரித்துள்ளார்.
யாழ்.கன்னாதிட்டி வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நேற்று காலை ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அரசாங்கத் திணைக்களம் உட்பட வங்கி போன்ற பல சேவை மையங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அiயாள அட்டை மிக முக்கியமானது. இதனால் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
16 வயது முடிவடைந்து ஒரு வருட கால எல்லைக்குள் நிச்சயமாக அனைவரும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் இனிவரும் காலங்களில் அவர்களுக்கு எதிரான தண்டம் விதிக்கப்படும்.
AB1 வெள்ளை விண்ணப்பப் படிவங்கள் மூலம் சாதாரணமாக தேசிய அடையாள அட்டைகள் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். AB17 விண்ணப்பபட படிவங்கள் மூலம் தேசிய அடையாள அட்டையைத் தெலைத்தவர்கள், தகவல் பிழைதிருத்தங்கள் செய்து கொள்ள விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரணியல் அடையாள அட்டைகள் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் சகலருக்கும் விநியோகிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமாரா உறுதியளித்தார்.
கைவிரல் அடையாளத்துடன் அறிமுகப்படுத்தப்படும் புதிய அடையாள அட்டை விநயோகத்திற்கு சில எதிர்மறையான கருத்துக்களும் வெளிவருகின்றது. இருப்பினும் இலத்திரனியல் அடையாள அட்டை விநயோகிப்பதற்கான ஆயர்த்த பிரதேச செயலகம் ஊடாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படித் திட்டத்தில் நிறைந்த வேலைப்பழு இருக்கும் காரணத்தினால் உறுதியாக எப்போது இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று சொல்லமுடியாமல் உள்ளது.
ஆனாலும் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு மக்கள் அனைவரிடத்திலும் இலத்திரனியல் அடையாள அட்டை கைகளில் இருக்கும் என்றும் அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.