Ad Widget

13ஆவது திருத்தத்தினை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: யாழ். மாநகரசபை எதிர்க்கட்சி

jaffna_municipal13ஆவது திருத்தத்தினை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், தமது கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இதனை வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

26 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழர்கள் திருப்தி அடையக்கூடிய வகையில், அல்லது திருப்பதியடைய முடியாத தீர்வாக இல்லாவிடினும், ஓரளவு ஆரம்ப படியாக அது முன்னர் இருந்தது.

ஆனால், அண்மையில் இந்தியா முதல் வெளிநாடு வரையில் ஜனாதிபதி கூறியிருக்கின்றார் 13இல் இருந்து பிளஸ் என்ற அதிகப்படுத்தி கூடுதலான அதிகாரங்களை வழங்குவோம் என கூறி வந்த நிலையில், போருக்குப் பின்னரான 4 வருட காலப்பகுதியில் வடமாகாணத்தில் தேர்தலை நடாத்தக் கூடிய சூழ்நிலை இருந்தும் கூட, உள்ளூராட்சி தேர்தலை நடாத்திய அரசு 4 வருடங்களின் பின்பு வடமாகாண சபை தேர்தலை நடத்துகின்றது.

தமிழர்களுக்கு கூடுதலான ஆட்சி, அதிகாரம் சென்று விடும் என்ற ஆதங்கத்தினால், பேரினவாத எழுச்சியின் காரணமாக இந்த அரசாங்கம், அதிகாரங்களை குறைப்பதற்கான முத்திப்புக்களை முன்னெடுத்து வருகின்றது.

எமது சொற்ப அதிகாரங்களை மேல் நோக்கி சென்று பெற்றுக்கொள்ளும் இந்த சூழ்நிலையில், அரசாங்கம் திட்டமிட்டு எமது காணி, பொலிஸ் அதிகாரத்தினை குறைப்பதற்கான நடவடிக்கையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் 13ஆவது திருத்தத்தில் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்த கூடாது என வலியுறுத்தி வருகின்றோம்.

அந்த வகையில், யாழ். மாநகர சபையில் இருக்கும் 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களும், 13ஆவது திருத்தம் கைவிட வேண்டும் என்றும், அரசாங்கம் பிரேரணையை கொண்டு செல்ல வேண்டுமென்றால், அதை நிச்சயமாக யாழ். மாநகர சபையில் தோற்கடிப்பார்கள்.

அதனால் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 13ஆவது அரசியல் அமைப்பினை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என்றும் திருத்தத்தில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்த கூடாது. அதற்கு செழுமையூட்டப்பட வேண்டும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அரசாங்கம் தெரிவித்து நிகழ்ச்சி நிரலை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதுடன், எமது கண்டனத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளை, தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி, எந்த அதிகார பகிர்வுக்கும் துணை போகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு துணைபோவார்களேயானால், அவர்கள் வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகத்தினையும், தமிழ் பேசும் இனத்திற்கு செய்கின்றார்கள் என்ற வரலாறு அவர்களுக்கு பாடமாக புகட்டி நிற்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Related Posts