07 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பலி

ஊர்காவற்துறை, நாரன்தனே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றில் விழுந்து குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

07 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் ஊர்காவற்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts