Ad Widget

 பாடசாலைகளுக்கு அருகில் போதைவஸ்து விற்கப்படுகிறது – விஜயகலா

பாடசாலைகளில் அருகிலுள்ள பெட்டிக் கடைகளில் போதைவஸ்துக்கள் பாவனை. இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு இந்த போதைவஸ்துக்கள் விற்கப்பட்டுள்ளன. இதனால் பாடசாலைகளுக்கு அருகில் பெட்டிக்கடைகள் இருக்கக்கூடாது என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

vijayakala-makeswaran

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா வியாழக்கிழமை (26) நடைபெற்ற வேளையில் அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

பாடசாலைகளுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடைகளில் வெற்றிலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும். வடமாகாணத்தில் சன்னங்களை உடலில் சுமந்த சிறார்களுக்கான வைத்தியசாலையை கிளிநொச்சியில் அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அவர் செய்து தரவில்லை. தற்போதுள்ள இந்த அரசாங்கம் அதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Posts