Ad Widget

 நளினியை முன்விடுதலை செய்ய அதிகாரமில்லை: தமிழக அரசு பதில்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினியின் முன்விடுதலை கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசு கூறியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள தம்மை முன்விடுதலை செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை விடுவிக்கலாம் என கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை மனுவில் சுட்டிக்காட்டியுள்ள நளினி தம்மை முன்விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.

நளினியின் இந்த மனுவிற்கு தமிழக அரசு உள்துறை துணைச் செயலாளர் டேனியல் சென்னை நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். ராஜீவ் வழக்கை சிபிஐ விசாரித்ததால் நளினியை முன்விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

மேலும்,வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த காரணங்களால் இவ்விவகாரத்தில் தமிழக அரசாங்கம் முடிவெடுக்க இயலாது என பதில் அளிக்கப்பட்டுள்ளது. நளினி மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Posts