Ad Widget

ஸ்கான் இயந்திரத்துக்குள் மரணித்த மகளின் விசாரணையை மூடி மறைக்க இடமளிக்க வேண்டாம்: தாய்

scan_babyநவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தார்.

வலியால் வருந்துவது போல சில அறிகுறிகள் காணப்பட்டதால் ஜனவரி 31இல், தனது மகளை கொழும்பு, நவலோகா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

‘தனது மகளை பார்வையிட்ட வைத்தியர், இரத்த பரிசோதனைகளையும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கையையும் பெறுமாறு கூறினார். தனது மகள் புத்தினி கௌசல்யாவுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து எம்.ஆர்.ஐ ஸ்கானிங் இயந்திரத்துக்குள் கிடத்தினர். 30 நிமிடங்களின் பின் ஒரு சத்தம் கேட்டது.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தின் பின் எனது மகளை வெளியே எடுத்தனர். அவள், நீல நிறமாகிவிட்டதையும் வயிறு வீங்கிவிட்டதையும் நான் கண்டேன். இது நடந்து 10 நிமிடங்களின் பின்னரே வேறு வைத்தியர்கள் அங்கு வந்தனர்.

பின்னர், எனது மகளை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். அவள் உடல் குளிர்ந்துவிட்டது என நான் கூறிய பின், அவளை வெப்பம் வழங்கும் இயந்திரத்தினுள் வைத்தனர். அவர்கள் எங்களை நான்கு நாட்களாக ஏமாற்றினர்.

நான்காம் நாள் அவளது மூக்கினுள் எறும்புகள் வரிசையாக செல்வதை கண்டேன். தனது மகள் ஸ்கான் இயந்திரத்தினுள் இறந்துவிட்ட போதிலும் நிர்வாகம் அதை மறைத்து மகள் நான்கு நாட்களின் பின் இறந்ததாக அறிவித்தனர்’ என்று அச்சிறுமியின் தாய் கூறினார்.

அடுத்த விசாரணை தினத்தில் வைத்தியசாலை அதிகாரிகளை சாட்சியமளிக்க அழைப்பாணை விடுப்பதாக கூறிய நீதவான், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related Posts