Ad Widget

வேட்டி விவகாரம் கிரிக்கெட் கிளப் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டில் வழக்கு

வேட்டி கட்டி சென்ற நீதிபதியை கிளப்பில் அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் கார்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கில் கூறியிருப்பதாவது:

vakkeeel-veddy

சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வக்கீல் ஆர்.காந்தி மற்றும் சாமிநாதன் ஆகியோர் வேட்டி கட்டிக்கொண்டு சென்றனர். இந்த காரணத்தால் அவர்களை புத்தக வெளியீட்டு விழா நடந்த அரங்கிற்குள் செல்ல அங்கிருந்த ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

இதற்கு உயர் நீதிமன்ற வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பாரம்பரிய உடை வேட்டி தான். தமிழகத்தில் ஜிம்கானா கிளப் உள்பட 5 கிளப்புகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்கிறது. எனவே, இந்த கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் வக்கீல்களை அவமதித்ததால் மனித உரிமை பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். கிளப்புகளுக்கு இதுதொடர்பாக புதிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். கிளப்புகளின் லைசென்சு ரத்து செய்யவேண்டும். தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் மீது நடவடிக்கை எடுக் கவேண்டும்.இவ்வாறு அவர் வழக் கில் கூறியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

போராட்டம்

கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி கட்டி சென்ற நீதிபதி மற்றும் வக்கீலை அவமதித்த கிளப் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறுக்கபட்டோர் நீதியின் சங்க தலைவரும் உயர் நீதிமன்ற வக்கீலுமான ஆரோக்கியதாஸ் தலைமையில் வக்கீல்கள் ரமேஷ் உள்பட பலர் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதவிர ஜனநாயக வக்கீல்கள் சங்கம் சார்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது வக்கீல்கள் அனைவரும் வேட்டி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளப் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று வக்கீல்கள் அறிவித்தனர்.

Related Posts