Ad Widget

வேட்டி கட்டியோரை அனுமதிக்காத கிளப்புகளின் அனுமதி ரத்து செய்யப்படும் – ஜெயலலிதா

வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் இருப்பது உடை தொடர்பான எதேச்சதிகாரம் இப்படி தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எச்சரித்துள்ளார்.

jeya-lalithaa

தமிழர் உடையான வேட்டி அணிந்து கிளப்களுக்கு செல்ல நடப்பு கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வரப்படும். வருங்காலங்களில் தமிழர் கலாசாரத்துக்கு எதிரான செயல்களில் கிளப்கள் ஈடுபட்டால், அந்த கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110ன் கீழ் ஒரு அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா படித்தார். அறிக்கை விவரம்:

வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொள்வதற்கோ அல்லது உரையாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லாத சூழ்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேட்டி அணிந்து பங்கேற்க தனியார் கிளப் தடை விதித்திருப்பது அரசமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயக மரபுகளுக்கும், தனி நபர் உரிமைக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் எதிரான செயல்.

கடந்த 11ம் தேதி மாலை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் கூட்ட அரங்கில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை நீதிபதிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி டி.அரிபரந்தாமன், சில மூத்த வழக்கறிஞர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்புக்குள் செல்ல முயன்றபோது, வேட்டி அணிந்து இருந்தனர் என்ற ஒரே காரணத்தை காட்டி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இது தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் அவமதிக்கும், கொச்சைப்படுத்தும் செயல். இதற்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சி அகற்றப்பட்டு 67 ஆண்டுகள் ஆகியும் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது.

இந்த பிரச்னை கடந்த 14ம் தேதி தமிழக சட்டமன்ற பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்துக் கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிளப் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்கள். இந்த அவைக்கு வெளியேயும் சிலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

Related Posts