Ad Widget

வெள்ள வாய்க்காலை மூடி வீதி புனரமைப்பு, உடுவிலில் மக்கள் கடும் எதிர்ப்பு!

உடுவில் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட உடுவில் டச்சு வீதி, சண்டிலிப்பாய் வீதி என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன.

UDUVIL

எனினும் இந்த வீதிகளின் இருமருங்கிலும் உள்ள வெள்ள வாயக்காலை மூடி வீதி அமைக்கப்படுவதால் மழைக்காலங்களில் நெருக்கடி ஏற்படும் என்று அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதிகளைப் புனரமைக்கும் பணி ஆரம்பிக்கும் போது வீதியின் இருமருங்கிலுமுள்ள வெள்ள வாய்க்கால் புனரமைப்பு செய்யப்பட்டு சிமெந்தினால் வடிகால் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி உடுவில் மகளிர் கல்லூரிக்கு அருகிலிருந்து வெள்ள வாய்க்கால் சிமெந்தினால் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப் பட்டுள்ளது.

தற்போது வாய்க்காலை மூடி வீதி அமைக்கும் பணியை ஒப்பந்தகாரர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த அவிருத்திக் குறைபாடுகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையொப்பம் இட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட திணைக்களங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related Posts