Ad Widget

விரைவில் வரலாம் “குப்பைக்கும் வரி”

Kuppaiதிண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள் தற்போது பெரும் நெருக்கடியாகியுள்ளநிலையில் எதிர்காலத்தில் நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் வசிப்பவர்களிடமிருந்து குப்பைக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

தினமும் 800 மெற்றிக் தொன் குப்பைகளை அகற்றுவது கொழும்பு மாநகரசபைக்கு இலகுவான விடயமல்ல. கடுவலை நகரசபை ஒரு நாளைக்கு 80 மெற்றிக் தொன் திண்மக்கழிவை சேகரிக்கின்றது.

ஏனைய பெரிய நகரங்களும் இவ்வாறே நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. இவற்றை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் வரி நிர்ணயம் செய்வது தவிர்க்கமுடியாதது என அவர் கூறினார்.

Related Posts