ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று அருகிலிருந்த வயலுக்குள் பாய்ந்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேயிடத்தை சேர்ந்த வே.துவாரகன் (வயது 16) ஆர்.விவேக் (வயது 16) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.