Ad Widget

வாழ்வாதாரத்துக்காகப் போராடும் பெண் தலைமை குடும்பங்களுக்கு உதவி – அனந்தி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அவசியமானது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

ananthi_sashitharan

குறிப்பாக, பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் நிலை மிக மோசமாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய அனந்தி சசிதரன் அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தாம் எடுக்கிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும் யுத்தத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் ஏராளம். அதிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அந்த மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். ஆனால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தயாராக இல்லை.

தற்போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றோம். இதில் பெரும் பிரச்சினையாக அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது. இதனை மக்கள் நேரடியாகவே முறையிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண சபையிலும் தெரிவித்திருக்கிறேன். மாகாண சபையின் ஊடகவும் ஏனைய வழிகளிலும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு உதவ நடவடிக்கைகளை எடுக்கிறோம். உதவிகளை வழங்குவதற்கு புலம் பெயர் உறவுகள் தயாராகவே உள்ளனர். உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இதற்கப்பாலும் தற்போது பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கே உதவிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டி நிலை ஏற்பட்டிருக்கின்றது. என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related Posts