Ad Widget

வல்வெட்டித்துறை நகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி

theepam-velakkuவல்வெட்டித்துறை நகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது.

நகர சபைத் தலைவர் நடராஜா அனந்தராஜா தலைமையில் நகர சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை(20) கூடியபோது, உறுப்பினர் கந்தசாமியின் தீர்மானத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நினைவு அஞ்சலி நிகழ்வில் நகர சபையின் 7 உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இருந்தும் இரண்டு உறுப்பினர்கள் அதில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச் செய்தனர். வெளிநடப்புச் செய்தவர்களில் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் மற்றயவர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமாவார்.

அத்துடன், இந்த நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சபை வளாகத்தில் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் அதிகளவில் இருந்தனர்.

மேற்படி நகர சபையில் 9 உறுப்பினர்கள் இருப்பதுடன், அவர்களில் 7 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இரண்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களும் இருக்கின்றதுடன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி இந்திரன் கைலாயினியும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts