Ad Widget

வலி. வடக்கு மக்களை பாதாளத்திற்குள் தள்ள முயற்சி – சஜீவன்

sajeepanவலி.வடக்கு மக்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணிகளுக்குள் மீள்குடியேற வைத்து அவர்களைப் பாதாளத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அவர்,

‘ஜே. 246 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த தையிட்டி, மயிலிட்டி கிராம மக்களை இனிமேல் அவர்களின் பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்ய முடியாது எனவும் அவர்கள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தார்.

இருந்தும், அந்தக் காணிகள் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் காணப்படவில்லை.

அத்துடன், குறித்த பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதை வன்மையாக கண்டிப்பதுடன், அதனை நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

மயிலிட்டி மக்களை சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை!

Related Posts