Ad Widget

வலி. கிழக்கில் குடிநீருக்குத் தட்டுப்பாடு

வலி.கிழக்கு பிரதேசத்திலுள்ள குளங்கள் பலவற்றில் தண்ணீர் முழுமையாக வற்றியுள்ளதால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

தரவை நிலங்களில் வறட்சியடைந்ததாலும் கால் நடைகள் தண்ணீர் இல்லாமல் பெரும் பாதிப்படைந்துள்ளன.

தற்போது கடும் வறட்சி, வெப்பம், மழையின்மையால் தரவை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன. குளங்களில் தண்ணீர் இன்மையால் கால்நடைகள் உணவுகள் இன்றி அலைந்து திரிவதைக் காணமுடிகிறது.

இதேவேளை விவசாய நிலங்களிலும் கிணற்று நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related Posts