வட பகுதி ரயில் சேவை ஸ்தம்பிதம்: இரண்டு யானைகள் மோதி பலி

ரயில் தண்டம்புரண்டதன் காரணமாக வட பகுதிக்கான ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று (09) இரவு 11.20 மணியளவில் யாழ், நோக்கிச் சென்ற ரயிலில் அம்பன்பொல மற்றும் கல்கமுவ இடையே யானைகள் இரண்டு மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ளது.

இதன்போது இரண்டு யானைகளும் உயிரிழந்துள்ள நிலையில் ரயிலில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

ரயில் பாதையை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் விரைவில் சேவை வழமைக்குத் திரும்பும் என்றும் மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts