Ad Widget

வட-கிழக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும்

காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலான கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று எதிர்வு கூறியுள்ள வானிலை அவதான நிலையம், மீனவர்களையும் கடற்படையினரையும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழையுடன் கூடிய காற்று வீசும் என்றும் இதன் தாக்கத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை வரை எதிர்ப்பார்க்கலாம் என்றும் சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்றும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 10-20 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மாத்தறை வரையிலும் கொழும்பு, முல்லைத்தீவு, மன்னார், சிலாபம் ஆகிய பகுதிகளில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதனால், கரையோரங்களை அண்டிய பகுதிகளில் வாழ்வோர் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts