Ad Widget

வடமாகாண சபையை முடிந்தால் தடைசெய்யட்டும் – சிவாஜிலிங்கம்

sivajilingam_tna_mpநிர்மாணத்துறை, பொதுச்சேவைகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச வடமாகாண சபையை தடைசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும்’ என வடமாகாண சபையின் உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.

‘சிறுபான்மையினர் அனைவரும் இணைந்து ஒரு தலைமையின் கீழ் போராட வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரைவச் செயலகத்தில் வியாழக்கிழமை(22) காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘ஐ.நா அறிக்கையின் படி முள்ளிவாய்க்காலில் 70,000 மக்கள் மாண்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எம் மக்களை நினைவு கூர அரசாங்கம் தடைவிதித்துள்ளது. மலையக மக்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் அடக்கு முறையை இவ் அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக போராடிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜய வீரவின் நினைவைக் கொண்டாட முடியும் எனில் எம்மக்களை நாம் ஏன் நினைவு கூர முடியாது?’ என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Posts