Ad Widget

வடமாகாணத்திலே அதிகளவு விஞ்ஞான ஆய்வு கூடம் – வடக்கு ஆளுநர்

GA Chandrasiriஇலங்கையில் உள்ள ஆயிரம் விஞ்ஞான ஆய்வு கூடங்களில் 91 ஆய்வு கூடங்கள் வடமாகாணத்திலே உள்ளதுடன் ஏனைய மாகாணத்துடன் ஒப்பிடும்போது வடமாகாணமே அதிகளவு விஞ்ஞான ஆய்வு கூடங்களைக் கொண்டிருப்பதாகவும் வடக்கு ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்தார்.

நேற்று காலை 10மணியளவில் வேலணை மத்திய கல்லூரியில் விஞ்ஞான ஆய்வு கூட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் யாழ்.வலயம் கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் கல்வி வளர்ச்சி 8-9 வீதம் அதிகரித்துள்ளதாகவும் வடமாகாணத்தில் வளங்கள் நிறைந்து காணப்படுவதே இதற்கு காரணம்.ஆகவே கிடைத்துள்ள வளங்களை உச்சமாக பயன்படுத்தி தொழில் கல்வியூடாக வேலை வாய்ப்பை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரர் அலென்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர். –

Related Posts