Ad Widget

வடமராட்சி மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கப்பட்டன

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் வடமராட்சிப் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மீனவ குடும்பங்களிற்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் நேற்றய தினம் இடம்பெற்றது.

ns02

இதன்போது, 7 மீனவர்களுக்கு படகுகளும், 36 பேருக்கு 18 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவால் வழங்கிவைக்கப்பட்டது.

வன்னியில் கைவிடப்பட்டு உரிமை கோரப்படாத நிலையிலிருந்து அரசுடமையாக்கப்பட்ட 33 படகுகளை, மக்களுக்கு வழங்கும்படி அரசாங்கம், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு வழங்கிய நிலையில் அவற்றில் பாவனைக்கு உகந்த 30 படகுகள் புனரமைப்புச் செய்து முதற்கட்டமாக 7 படகுகள் இன்று கையளிக்கப்பட்டதாகவும் மிகுதி விரைவில் வறுக்கோட்டிற்குக் கீழுள்ள மீனவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மீனவர்களின் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம், யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி, மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts