வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று (திங்கட்கிழமை) அவர் ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் உம் சப்ரகமுவ மாகாண ஆளுநராக தம்ம திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பேராசிரியர் சுரேஷ் ராகவன் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றவர்.
2005ம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் MA பட்டம் பெற்றார்.
2008ம் ஆண்டு PhD முடித்தார்.
2008-2011களில் அவருக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டது.
கனடா – ஒன்டோரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினையும் பெற்றார்.
நேரடி அரசியலில் பெரும் அனுபவசாலி.
தற்போது வரையில் ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக உள்ளார்.
மிக முக்கியமாக அவர் ஒரு பௌத்த சிந்தனைவாதி.பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
The Buddhist Monks and the Politics of Lanka’s Civil War (Equinox – UK), and Post -War Militancy of Sinhala Saṅgha: Reasons and Reactions (Oxford University Press (North America) [co-edited] .
அவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளருமாவார்