Ad Widget

வடக்கில் குழந்தைகள் விவரம் வலைப்பின்னல் மூலம் பதிவு

inter-net-online-registerவடமாகாணத்தில் பிறக்கும் குழந்தைகளின் விவரங்கள் உடனுக்குடன் வலைப்பின்னல் மூலம் பதிவு செய்ய மத்திய சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

வீடுகளில் பிறக்கும் குழந்தைகளின் பதிவு பதிவுகாரரிடம் செய்வதில் தாமதம் ஏற்படுவது சில பெற்றோர் குழந்தையின் பிறப்புக் குறித்துப் பதிவு செய்யாது விடுதல் ஒரு மாகாணத்தில் பிறக்கும் பிள்ளையின் பதிவை மற்றொரு மாகாணத்தில் குடிப்பரம்பலுக்காகப் பதிவு செய்வது போன்றவற்றை முன்வைத்து மத்திய சுகாதார அமைச்சு பிறக்கும் குழந்தைகளின் பதிவை அன்றைய தினமே அருகில் உள்ள போதனா மருத்துவமனை, மாகாண பொது மருத்துவமனை, ஆதார மருத்துவமனை போன்றவற்றில் பதிவு செய்து வலைப்பின்னல் மூலம் மத்திய சுகாதார அமைச்சில் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக வடமாகாணத்தில் உள்ள போதனா மருத்துவமனை, பொது மருத்துவமனைப் பணிப்பாளர்கள் ஆதார மருத்துவமனைகளின் அத்தியட்சகர்கள் இந்த மருத் துவமனைகளில் கடமையாற்றும் பிரசவப் பிரிவுகளுக்குப் பொறுப்பான மருத்துவர்கள், மருத்துவத் தாதியர்கள் ஆகியோருக்கு இருநாள்கள் பயிற்சிக் கருத்தரங்கு 22 ஆம், 23ஆம் திகதிகளில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணி மனையில் நடத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts