வங்கக்கடலில் உருவானது அக்வான் புயல்

வங்கக் கடலில் அக்வான் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் தற்போது புயலாக மாறியுள்ளது எனவும், இது சென்னைக்கு கிழக்கே 610 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி நெல்லூர் – துனி இடையே அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி வங்ககடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவானது.

இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழமுக்கமாக மாறியது.

இந்நிலையில் மேலும் வலுவடைந்து நேற்று புயலாக மாறியுள்ளது.

அதன்படி நேற்று இரவு 7 மணியளவில் வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் அக்வான் புயலாக உருவானது.

இந்த புயல் இன்று தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் நாளை அதி தீவிர புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த புயல் காரணமாக ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் முன்கூட்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts