Ad Widget

ரவிராஜ் தமிழ் தேசத்து துரோகியா? : நினைவுநாள் நிகழ்வில் துண்டுப்பிரசுரம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட சாவகச்சேரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட 8 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

nadaraja-ravi-raj

இந்த நிகழ்வின் இறுதியில் மக்கள் சேவையில் அரசியல் பணிபுரிந்து தமிழ் தேசியத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தன்னுயிரை ஈர்த்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களின் பாதையினை பின்பற்றி நிற்கும் என்றும் மறவாத ஆதரவாளர்கள் மற்றும் எப்போதும் உள்ளத்தில் நினைவு கூறும் அலுவலக ஊழியர்கள் சாவகச்சேரி என குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் அவர்களது நினைவுநாள் நிகழ்வுகளில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாது ஏன் புறக்கணிக்கின்றனர்.

அவர் என்ன தமிழ் மக்களினதும் தமிழ் தேசியத்தினதும் துரோகியா? என்றவாறு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

raviraj-notes-1

raviraj-notes-2

Related Posts