ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திரைப்படத்தை சுந்தர்.சி அல்லது சிபி சக்கரவர்த்தி இயக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து பின்வாங்கிய நிலையில், தற்போது ‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
படத்தின் புரோமோஷன் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் கையில் ஆபரேஷன் தியேட்டரில் பயன்படுத்தும் கத்தியை வைத்துள்ளார். மேலும், ஆபரேஷன் தியேட்டரில் ஒருவரை அடித்து கீழே படுக்கவைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ரஜினி இதில் அதிரடியான ஒரு டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. கையில் வேல் காப்புடன் இருக்கும் ரஜினியின் இந்த லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“இது வழக்கமான 5 ரூபாய் மருத்துவர் பற்றிய கதை அல்ல. ‘தர்மன்’ என்கிற மருத்துவரின் ஸ்வாக் (Swag) மற்றும் அதிரடி நிறைந்த ஒரு பக்காவான ஃபேமிலி என்டர்டெய்னராக படம் இருக்கும்.”
“கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படம் போன்ற பாணியில் இந்தத் திரைப்படம் உருவாகிறது.”
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:
முக்கிய கதாபாத்திரங்கள்: சிம்ரன், ராஷி கண்ணா
இசை: அனிருத்
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் இத்திரைப்படம், கமல்ஹாசனின் தயாரிப்பில் அவர் நடிப்பதால் கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.