Ad Widget

ரஜினியை கடத்த வீரப்பன் திட்டமிட்டார்?-ராம்கோபால் வர்மா

தமிழக மற்றும் கர்நாடக போலீஸ் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனப்பமாக திகழ்ந்த சந்தனக்கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு, தமிழக போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பனின் மறைவுக்கு பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ். தமிழ், கன்னடம் இரண்டு மொழியிலும் இப்படம் வெளிவந்தது.

verappan

ரமேஷை தொடர்ந்து சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து கில்லிங் வீரப்பன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் டில்லி நாடக நடிகர் சந்தீப் வீரப்பனாக நடிக்க, போலீஸ் அதிகாரியாக மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம் வருகிற மே 27ம் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே ராம்கோபால் வர்மா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ”ராஜ்குமாரை போன்று ரஜினிகாந்த்தையும் வீரப்பன் கடத்த ரகசிய திட்டம் தீட்டியிருந்ததாகவும், இதை அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள், இந்தபடம் சம்பந்தமான தகவல்களை சேகரிக்கும்போது தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ராம்கோபால் வர்மா தன் டுவிட்டர் பக்கத்தில், வீரப்பன், ரஜினியை விட தனக்கு பெரிய புகழ் கிடைக்க வேண்டும் என்று எண்ணியதாகவும், அதற்காக ரஜினியை வைத்து தனக்காக ஒரு படம் பண்ண எண்ணியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே வீரப்பன், ரஜினியை கடத்த திட்டமிட்டாரா.? அல்லது தன் படத்தின் ரிலீஸ்க்காக இப்படியொரு பப்ளிசிட்டியை ராம்கோபால் வர்மா கிளப்பிவிட்டாரா.? என்பது அவருக்கே வெளிச்சம்.

Related Posts