Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1005 தாதியர்கள் தேவை

Sri-Bavantha-raja-hospitalயாழ். போதனா வைத்தியசாலைக்கு 1400 தாதியர்கள் தேவையாகவுள்ள போதும் தற்போது 395 தாதியர்களே கடமையாற்றுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (27) இரண்டாவது நாளாக நடைபெற்றது.இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், யாழ். போதனா வைத்தியசாலை கட்டிடங்களும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அதற்கு அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது குறுக்கிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அதிகளவான கட்டிடங்கள் காணப்படுவதால் நோயாளர்கள் சுவாசிப்பதற்கும் அப்பகுதியில் செல்வதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு எதிர்காலத்தில் கட்டிடங்கள் அமைப்பதாக இருந்தால் வேறு இடத்தில் அமைக்குமாறு அவர் கூறினார்.

Related Posts