Ad Widget

யாழ் பல்கலையில் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!!

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை யாழ் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பெருமளவானோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts