சர்வதேச தொழிலாளர் தினமாகிய மேதினத்தை இம்முறை பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து கொண்டாடவுள்ளது.
மேதின நிகழ்வானது நாளை காலை 10மணியளவில் ஊர்வலத்துடன் ஆரம்பமாகின்றது. பல்கலைக்கழக பிரதான வாயிலில் ஆரம்பமாகி குமாரசாமி வீதி வழியாக பலாலி வீதியை அடைந்து அங்கிருந்து பரமேஸ்வராச் சந்தியை அடைந்து இராமநாதன் வீதியூடாக மீண்டும் பல்கலைக்கழக பிரதான வாயிலூடாக கைலாசபதி கலையரங்கை அடைந்ததும் ஊர்வலம் நிறைவுபெறும்.
அதனைத் தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் மேதினக் கூட்டம் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.