Ad Widget

யாழ் நூழைவாயிலை அசிங்கப்படுத்த முனைந்த நல்லூர் பிரதேச சபை!

யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நாவற்குழி பாலத்திற்கும் யாழ்.வளைவுக்கும் இடையில் உள்ள நன்னீர் தேங்கும் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்கு நல்லூர் பிரதேச சபை கடந்த வாரம் முயற்சியினை மேற்கொண்டது.

np1

அவ் முயற்சிக்கு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீறி கழிவுகள் அங்கு கொட்டப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபையினால் அவ் முயற்சி கைவிடப்பட்டது.

நல்லூர் பிரதேச சபை கழிவுகளை கொண்டுவதற்கு முனைந்த காணி தனியார் ஒருவரினால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட 2 ஏக்கர் காணியாகும்.

குறித்த தனியாருக்கு அப்பிரதேசத்தில் 14 ஏக்கர் காணி உள்ளது ஆனால் அக் காணிகளுக்கு வயல் வரம்புகளே பாதையாக காணப்படுகின்றது.

தனது காணிக்கு பாதையினை போடுவதற்காக அவர் பல தடவைகள் முயற்சித்த போதிலும் வயல் காணிக்குள் பாதை போடுவதற்கு கமநல சேவைகள் திணைக்களம் அனுமதி அளிக்க வில்லை அதனை அடுத்து குறித்த தனி நபர் நல்லூர் பிரதேச சபைக்கு தனது 14 ஏக்கர் காணியின் முடிவில் உள்ள 2ஏக்கர் காணியினை நன்கொடையாக கொடுத்து அக் காணியை பிரதேச சபை பயன்படுத்துமாறு
கூறினார்.

np2

அக் காணியை நன்கொடையாக பெற்றுக்கொண்ட நல்லூர் பிரதேச சபை அக் காணிக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் பாதை அமைத்துள்ளது.

வயல் காணிக்குள் பாதை அமைக்க கமநல சேவைகள் திணைக்களம் அனுமதி அளிக்காத போதிலும் அதனையும் மீறி நல்லூர் பிரதேச சபை வயல் காணிக்குள் பாதையினை அமைத்தது 2 மில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்ட அப்பாதையானது கட்டட இடிபாடுகளை கொண்டே அமைக்கப்பட்டுள்ளது அப் பாதைக்கே 2 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை கூறுகின்றது.

இந் நிலையில் கடந்த 26ம் திகதி செவ்வாய்க்கிழமை அக் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்காக நல்லூர் பிரதேச சபை முயற்சிகளை மேற்கொண்ட வேளை அவ் முயற்சியினை உடனடியாக கைவிடும் மாறு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் உத்தரவு இட்டது.

np3

உத்தரவை மீறி அவ் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபை அவ் முயற்சியை கைவிட்டதுடன் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லை என காரணம் கூறி நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட பிரதேசத்தில் கழிவகற்றும் நடவடிக்கையையும் கைவிட்டது.

கடந்த ஒரு வார காலமாக நல்லூர் பிரதேச சபை கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபடாததால் நேற்றைய தினம் (30) சனிக்கிழமை நல்லூர் பிரதேச சபையிடம் திருநெல்வேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் தாம் கழிவகற்றும் பணியில் ஈடுபடுவதகாவும் அதற்காக நல்லூர் பிரதேச சபையின் வாகனத்தை தரும்மாரும் கோரினர்.

அதற்கு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமையால் தான் தாம் கழிவகற்றும் பணியை இடைநிறுத்தி உள்ளதாகவும் தமக்கு இடம் கிடைத்தும் அப் பணியை மீள தொடருவோம் என கூறினார்.

அதற்கு இராணுவத்தினர் உங்களுக்கு இடம் கிடைக்கும் வரை நாம் அந்த பணியை செய்கின்றோம் எமக்கு கழிவுகளை கொட்டுவதற்கு இடம் உள்ளது நாம் அங்கே இவ் கழிவுகளை கொட்டுகின்றோம் என கூறி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லூர் பிரதேச சபையின் வாகனத்தை தருமாறு கோரினர் அதற்கு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பா.வசந்தகுமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனை அடுத்து இன்று (30) ஞாயிறு மாலை முதல் இராணுவத்தினரே நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

நல்லூர் பிரதேச சபையினர் தமக்கு நன்கொடையாக கிடைத்து என்பதற்காக அந்த காணிக்குள் கழிவுகளை கொட்ட தொடங்கி இருந்தால் நாம் அராலி வீதியில் காக்கை தீவின் ஊடாக செல்லும் போது எவ்வாறான இன்னல்களை எதிர் நோக்குகின்றோமே அதே இன்னல்களை யாழ் நகருக்கு கண்டி நெடுஞ்சாலையால் வருவோரும் எதிர் நோக்கி இருப்பார்கள்.

கழிவு கொட்ட முனைந்த காணிக்கு அருகாமையால் தான் புகையிரத பாதையும் அமைந்துள்ளது எனவே யாழ் நகருக்கு புகையிரதத்தால் வருவோரும் இன்னல்களை எதிர் நோக்கி இருப்பார்கள்.

யாழ்.நகரை அழகு படுத்த பலரும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் வேளையில் யாழ் நூழைவாயிலில் கழிவுகளை கொட்டி அசிங்கபடுத்த நினைத்துள்ளது நல்லூர் பிரதேச சபை அதேவேளை யாழில் நிலத்தடி நீர் வற்றி போகின்றது குடி நீருக்கு தட்டுப்பாடு நிலவியுள்ள நிலையில் நன்னீர் நீர்த்தேக்கங்கள் திருத்தப்பட வேண்டும் நன்னீர் தடுப்பணைகள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் என பலரும் கோரிக்கைகளை முன் வைத்து அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வரும் வேளையில் நன்னீர் திட்டத்தின் கீழ் உள்ள பிரதேசத்தில் கழிவுகளை கொட்டி நன்னீரை மாசுபடுத்த முனைந்துள்ளது.

அத்துடன் நன்னீர் தேங்கி நிற்கும் காணிக்குள் பாதை போடப்பட்டுள்ளது அப் பாதை யாழில் கடும் மழை பெய்யும் பட்சத்தில் காணமல் போய்விடும். அதற்காக நல்லூர் பிரதேச சபை 20 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளது.

நல்லூர் பிரதேசத்தின் இந்த பொறுப்பற்ற செயல் தொடர்பாக வடமாகாண சபையும் வடமாகாண முதலமைச்சரும் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நல்லூர் பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேச சபை ஆகும் எனவே வடமாகாண சபையும் வடமாகாண முதலமைசரும் இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பார்கள் என்பதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts